சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய கூடாது: வால்பாறையில் மதுபான கடை ஊழியர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

சட்டவிரோத மது விற்பனை செய்யக் கூடாது என்று அரசு மதுபான கடை ஊழியர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் தலைமையில் இன்று அரசு மதுபான கடைகளில் ஊழியர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 60-க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் சுமார் 70-ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு பெரியவர்களும், சிறியவர்களும் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வால்பாறை, சோலையாறு அணை, முடிஷ், ரொட்டிக் கடை ஆகிய பகுதிகளில் அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுபான கடைகளில் மொத்தமாக எஸ்டேட் நபர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்று எஸ்டேட் பகுதிகளில் விற்பதால் சிறுவர்களும் பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குடிப்பழக்கத்தால் வேலைக்கு செல்லாமல், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் தவித்து வருவதாக பெண்கள் தெரிவிக்கின்றனர்.



இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் தலைமையில் இன்று அரசு மதுபான கடைகளில் ஊழியர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கடை திறக்கும் நேரம் மற்றும் கடை அடைக்கும் நேரம் போன்றவை அரசு விதிமுறை நேரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அனைத்து மதுக் கடைகளிலும், பார்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு நபருக்கு அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது.

அரசு நிர்ணயித்த நேரம் பிற்பகல் 12 மணிக்கு முன்பு இரவு 10 மணிக்கு பின்பு கடை வியாபாரம் செய்ய கூடாது. அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் அதிக விலை வைத்து விற்பனை செய்யக் கூடாது. இவ்வாறு விதிமுறைக்கு புறம்பாக செயல்படும் கடை சூப்பர்வைசர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை மூலம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.

சில்லறை மது விற்பனை நபர்களை பிடித்து விசாரணை செய்யும் போது எந்த கடையில் மது பாட்டில்கள் வாங்கினார்கள் என்று தெரிய வந்தால் அந்த கடையின் சூப்பர்வைசர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்டேட் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால், உடனடியாக காவல் நிலைய 222201 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...