மாட்டுக்கறி விருந்துக்கு தடை விதிக்க வேண்டும்- கோவையில் விஷ்வ ஹிந்து பரிஷித் பஜ்ரங்தள் மனு..!

பெரியார் படிப்பகம் சார்பில் மாட்டுக்கறி விருந்து நடத்தினால் ஹிந்து இயக்கங்கள் சார்பில் பன்றிக்கறி விருந்து நடத்த அனுமதி தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் மாட்டுக்கறி விருந்துக்கு தடை விதிக்கவில்லை என்றால் பன்றி கறி விருந்து நடத்துவோம் என விஷ்வ ஹிந்து பரிஷித் பஜ்ரங்தள் தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் விதமாக நேற்றைய தினம் வரும் சனிக்கிழமை "இரட்டிப்பு கொண்டாட்டம்- பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் மற்றும் உலகிலேயே அதிக சுவை உணவான மாட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி சுக்கா, மற்றும் கைமா வடையுடன் மாட்டுக்கறி விருந்து- சமத்துவத்தை விரும்பும் அனைவருக்குமான நிகழ்வு உரிமையுடன் கலந்து கொள்க... இடம்- பெரியார் படிப்பகம் மாலை 6 மணிக்கு" என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.



இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத்- பஜ்ரங்தள் சார்பில் இதற்கு கண்டனம் தெரிவித்து அவ்வாறான நிகழ்விற்கு தடை விதிக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மாவட்ட செயல் தலைவர் சிவலிங்கம், தலைமையில் தரப்பட்ட இந்த மனுவில், பேரறிவாளன் விடுதலையில் கொண்டாடுவதற்காக வேண்டுமென்றே பெரியார் திராவிடர் கழகம் இந்துக்கள் மனதை புண்படுத்தி, கோவை மாநகரில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்த இவ்வாறு விளம்பரம் செய்துள்ளனர் என்றும், அவர்கள் மாட்டுக்கறி விருந்து நடத்தினால் ஹிந்து இயக்கங்கள் சார்பில் பன்றிக்கறி விருந்து நடத்த அனுமதி தருமாறு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...