கோவை சந்தையில் தவறவிடப்பட்ட வட மாநில குழந்தைகள்: பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு..!

உடனடியாக புகார் அளித்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்குள் 1-மணி நேரத்திலேயே சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.


கோவை: கோவை சந்தையில் தவறவிடப்பட்ட வட மாநில குழந்தைகளை 1-மணி நேரத்தில் போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் பீம் பாஸ்மா (24). இவரது மனைவி பார்வதி (22). திருமணம் ஆகி, ரோகித் (6), மஞ்சித் (5) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தற்போது காளியபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை பீம் பாஸ்மா தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் எட்டிமடை பகுதியில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களும் மாயமாகி உள்ளனர்.

இதையடுத்து, கணவன், மனைவி இருவரும் நீண்ட நேரம் தேடி குழந்தைகள் கிடைக்காத நிலையில், அழுதவாறு சென்று க.க.சாவடி போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணன் உத்தரவின் பேரில், ரோந்து பணியில் இருக்கும் பெட்ரோல் வாகனம் உடனடியாக பாலக்காடு நெடுஞ்சாலையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வாளையாறு செல்லும் சர்வீஸ் சாலையில் இரண்டு சிறுவர்களும் அழுதவாறு சென்று கொண்டிருந்துள்ளனர். இதைக்கண்ட போலீசார் இருவரையும் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.



இதையடுத்து, பெற்றோர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்த போலீசார் அவர்களை கவனமாக பார்க்க அறிவுரை கூறி பத்திரமாக அனுப்பி வைத்தனர். உடனடியாக புகார் அளித்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்குள் 1 மணி நேரத்திலேயே சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...