திருப்பூரில் கணவரிடம் இழப்பீடு பெற்றுத்தர கோரி மனைவி குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா..!

தனது கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வரும் நிலையில், அவரிடம் உரிய இழப்பீடு பெற்றுத் தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


திருப்பூர்: திருப்பூரில் கணவரிடம் இழப்பீடு பெற்றுத்தர கோரி மனைவி குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் ஆத்து பாளையத்தை சேர்ந்தவர் பத்மாவதி (36).



இவர் நேற்று தனது மகள்களுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் பத்மாவதியிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து பத்மாவதி போலீசாரிடம் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம். எனது கணவர் பரந்தாமன். நாங்கள் இருவரும் திருப்பூர் ஆத்துப் பாளையத்தில் வசித்து வந்தோம். எங்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவரும் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து குடும்பத்துடன் இருந்து வந்தோம்.

இந்நிலையில் எனது கணவர் பரந்தாமனுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதுகுறித்து நான் கேட்கும் போது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் என்னை அவர் அடித்து கொடுமைப் படுத்தி துன்புறுத்தி வந்தார்.

இந்நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அப்போது அதிகாரிகள் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அதற்கு சற்று கால அவகாசம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

எனவே என்னை ஏமாற்றிய கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகள்களின் வாழ்க்கை கருத்தில் கொண்டு பரந்தாமனிடம் இருந்து எனக்கு உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...