கோவையில் பெண் மருத்துவர் தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை…!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவையில் பெண் மருத்துவர் திருமணம் ஆகி 6 மாதம் ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ராசி (27) இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.

ராசி கடந்த 2020-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் .படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேற்கொண்டு பி.ஜி படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார்.மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மருத்துவர் ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றவர் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் ராசி கீழே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் மேலே சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலிசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராசிக்கு திருமணம் ஆகி 6 மாதம் மட்டுமே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. பெண் மருத்துவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டாரா ? குடும்ப பிரச்சனை காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...