நூல் விலை உயர்வு: ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாட்கள் முழுமையாக வேலை நிறுத்தம் அறிவிப்பு!

நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விசைத்தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் கொடுத்து அதை துணியாக மாற்றி விற்பனை செய்து வருவார்கள். இந்நிலையில், நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் விசைத்தறிகள் 15 நாட்களுக்கு இயங்காத சூழல் உருவாகும்.



நூல் விலை ஏற்றத்தை கண்டித்து ஏற்கனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் 50% உற்பத்தி வேலை நிறுத்தம், நூல் கொள்முதல் நிறுத்தம், 16, 17 தேதிகளில் முழுமையான வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களை செய்தும் நூல் விலைக்கு ஏற்றபடி ஜவுளி விலை உயர்வாகாத காரணத்தால் இந்த 15 நாள் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் அளவில் ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும்.



ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர். பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...