கோவை மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் கார் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி 4 பேர் படுகாயம்…!

குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வயநாடு சென்று கொண்டிருந்த போது, மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள 3வது கொண்டை ஊசி வளைவில் இருந்து கார் தலைகூப்புற கவிழ்ந்தது.


கோவை: குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கேரளா மாநிலம் வயநாடு அருகே உள்ள அவர்களது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது, மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் இருந்து கார் தலைகூப்புற கவிழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் வயநாடு புல்பள்ளி கனிகுளத்து ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (65), இவரது மகன் யோபேஷ் (35), யோபேஷ் மகள் அனாமிகா (9), ஆப்ரஹாம் மகன் தாமஸ் (68), செபாஸ்டியன் மகன் ஜார்ஜ் (60) ஆகியோர் கடந்த 16 ம் தேதி வயாநட்டிலிருந்து வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று ஊர் திரும்பினர்.

காரை யோபேஸ் ஓட்டி வந்தார். இன்று காலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3 வது கொண்டை ஊசி வளைவு அருகில் கார் வந்த போது, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் காரில் பயணம் செய்த ஜோஸ் (65) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.



மேலும் காரில் பயணம் செய்த யோபேஷ், அனாமிகா, தாமஸ் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்தமேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம்,உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செல்வநாயகம் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கியஇருந்த அனைவரையும் மீட்டு, போலீஸ் காரில் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பள்ளத்தில் விழுந்த காரை பொக்லைன் மூலம் மீட்டனர். பின்னர், உயிரிழந்த ஜோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை தெரியாமல் பள்ளத்தில் கார் கவிழ்ந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார்

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...