மேம்பாலங்கள் திறக்க சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் என்ற அமைப்பு சார்பில் முதல்வருக்கு கோரிக்கை!

கோவையில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரையில் திறக்கப்படாமல் இருக்கும் மேம்பாலங்களை திறக்க சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் என்ற அமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் திறக்கப்படாமல் இருக்கும் மேம்பாலங்களை திறக்க வலியுறுத்தி சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் என்ற அமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்களது கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதலாம்‌ ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, கோவை மாநகர மக்களின்‌ சார்பில்‌ மாண்புமிகு முதலமைச்சருக்கு நல்வாழ்த்துக்கள்‌. பல ஆண்டுகளாக நிலுவையில்‌ உள்ள பல பிரச்சனைகள்‌ உங்கள்‌ அரசாங்கத்தால்‌ தீர்வு காணப்பட்டுள்ளது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும்‌ குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ரேஷன் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம்‌ நடத்தப்படுவது அருமையான திட்டமாகும்‌.

அதேசமயம்‌, கோவை மாநகர மக்களுக்கு கவலையளிக்கும்‌ நீண்ட நாள்‌ ஆவலாக உள்ளது. கவுண்டம்பாளையம்‌, ராமநாதபுரம்‌, உக்கடம்‌ ஆகிய இடங்களில்‌ உள்ள மேம்பாலங்கள்‌ பணி நிறைவு பெற்றும்‌ திறப்பதில்‌ தாமதம்‌ ஏற்படுவதும்‌ ஒரு பிரச்சனை. கட்டி முடிக்கப்பட்டு மாதங்கள்‌ ஆகியும்‌ இதுவரை போக்குவரத்திற்கு திறக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கும்‌ மேலாக கட்டுமான பணியின்‌ போது மக்கள்‌ சொல்லில்லடங்கா சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்‌.

சமீப காலங்களில்‌ முதல்வரால் தலைமைச்செயலகத்தில்‌ இருந்து காணொளி வாயிலாக பல முக்கிய திட்டங்கள்‌ தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்த மேம்பாலங்களை விரைவில்‌ திறப்பது, பொதுமக்களுக்கு மேலும்‌ சிரமத்தைத் தடுக்கும்‌ மற்றும்‌ அரசாங்கத்தின்‌ நன்மதிப்பை அதிகரிக்கும்‌. ஐயா, இனியும்‌ தாமதிக்காமல்‌ இந்த பாலங்களைத்‌ திறக்குமாறு தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌. பாலங்கள்‌ திறப்பு விழாவை நினைவு கூறும்‌ வகையில்‌ ஒரு முறையான திறப்பு விழா பொருத்தமானதாகக் கருதப்பட்டால்‌ உங்கள்‌ வசதிக்கேற்ப பின்னர்‌ நடத்தலாம்‌. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...