15 ஆண்டுகளாக 'ஜாப் ஒர்க்' கட்டணம் மாறவில்லை: 30,000 குறுந்தொழில் நிறுவனத்தினர் தவிப்பு!

ஒரு பொருள் உற்பத்தி செய்ய தேவைப்படும் உதிரி பாகங்களை ஜாப் ஒர்க் செய்து தரும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கட்டணம் கடந்த 15 ஆண்டுகளாக மாறாமல் இருப்பது குறுந்தொழில் நிறுவனந்தினரை கடுமையாக பாதிப்பதாக கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் தலைவர் சிவக்குமார் கூறியுள்ளார்.



கோவை: தொழில் நகரான கோவை டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், காஸ்டிங், வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப் செட், இன்ஜினியரிங் பொருட்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது.

ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்த தொழில் நிறுவனங்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோவை தொழில் வளர்ச்சியில் குறுந்தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய தொழில் நிறுவனங்களில் ஜாப் ஒர்க் செய்யும் பணிக்கு கட்டணம் கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. இதனால் குறுந்தொழில் முனைவோர் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவை திருப்பூர் மாவட்ட கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(COTMA) தலைவர், சிவக்குமார் கூறியதாவது:-

உற்பத்தி துறையின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்கள் மோட்டார் பம்ப் செட், வெட் கிரைண்டர் என்பது உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்திக்கு தேவைப்படும் உதிரி பாகங்களை தயாரித்து வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் மூலப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதும் இல்லை, பொருட்களை விற்பனை செய்வதும் இல்லை. பெரிய நிறுவனங்கள் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்களை ஜாப் ஒர்க் மட்டுமே குறுந்தொழில் நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன.

இதற்கு தேவைப்படும் மூலப் பொருட்களும் பெரிய நிறுவனங்களே வழங்கிவிடும். அதேபோல் குறுந்தொழில் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் செய்து வழங்கும் பொருட்களையும் பெரிய நிறுவனங்களே விற்பனை செய்யும். இவ்வாறு ஒரு பொருள் உற்பத்தி செய்ய தேவைப்படும் உதிரி பாகங்களை ஜாப் ஒர்க் செய்து தரும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கட்டணம் கடந்த 15 ஆண்டுகளாக மாறாமல் உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வரும் கட்டடங்களின் வாடகை மற்றும் மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 

ஊழியர்களுக்கான ஊதியமும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் தற்போது விலைவாசியை கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குறுந்தொழில் நிறுவனங்கள்  ஜாப் வொர்க் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மட்டும் 15 ஆண்டுகளாக மாறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு துறைகளில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து வரும் போதிலும் ஜாப் வொர்க் கட்டணம் மாறாமல் இருப்பது குறுந்தொழில் முனைவோருக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜாப் ஒர்க் செய்யும் பணிக்கு வழங்கும் கட்டணத்தை அதிகரிக்க பெரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...