கோவையில் அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் வளாகத்தில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி!

கோவை சூலூர் அருகே அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் வளாகத்தில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சூலூர் பாப்பம்பட்டி - செட்டிபாளையம் சாலையில் அதிமுக சூலூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சக்திவேலுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது.

அந்த வளாகத்தில் இரண்டு சிறிய அளவிலான அறைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறைகள் கட்ட அஸ்திவாரம் போடவில்லை என கூறப்படுகிறது. அதில் ஒரு அறை ஏ.டி.எம் மையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மற்றொரு அறையில் ஜன்னல் வைக்க ஒரு பகுதியில் சுவர் இடிக்கப்பட்டது.

இந்த பணியில் வேளாண்குடியை சேர்ந்த தொழிலாளி சிவா மற்றும் கோபால்சாமி ஆகிய இரண்டு பேர் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது திடீரென சுவர் இடிந்து உள்ளே பணியில் இருந்த சிவா மற்றும் கோபால்சாமி ஆகிய இருவர் மீது விழுந்துள்ளது.



இதில் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபால்சாமி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் சிவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...