உபி கியான்வாபி மஸ்ஜித் சீல் வைத்த விவகாரம்: நீதிமன்ற உத்தரவை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை மத்திய-மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: உபி கியான்வாபி மஸ்ஜித் சீல் வைத்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உபி.யில் அமைந்துள்ள பழமையான கியான்வாபி மசூதியில், தொழுகைக்காக இஸ்லாமியர்கள் ஒளி எனும் அங்க சுத்தி செய்யும் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக மசூதியில் கள ஆய்வு கோரி மனு தாக்கல் செய்த இந்து அமைப்பை சேர்ந்த ஒருவரின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது.



வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை மத்திய-மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக உக்கடம், வள்ளியம்மை பேக்கரி முன்புறம் மாவட்ட பொதுச்செயலாளர் AA. அப்துல் காதர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மண்டல தலைவர் ராஜா உசேன், விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் கோவை மாவட்ட தலைவர் பரிதா பேசும் அவர்கள் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.



SDPI-கட்சியின் கோவை மாவட்ட தலைவர் A.முஸ்தபா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...