கோவை பூ மார்க்கெட் மற்றும் வடவள்ளியில் 67-கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

ரூ.12,600-அபராதம் விதித்து, ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை பூ மார்க்கெட் மற்றும் வடவள்ளியில் 67-கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12,600-அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2019-முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், துணிப்பை அல்லது அதிகளவு மைக்கிரான் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட பைகள் மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், அவ்வப்போது கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் கடைகள், உணவகங்கள், சந்தைகளில் ஆய்வு மேற்கொண்டு தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வரும் கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும், பிளாஸ்டிக் பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கோவை மாநகராட்சியில் பூ மார்க்கெட் மற்றும் வடவள்ளி பகுதியில் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் என ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது அங்கிருந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 67-கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.12,600-அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பல்வேறு கடைகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...