கோவை கருமத்தம்பட்டி போலீசாருக்கு பூங்கொத்து கொடுத்து விவசாயிகள் வஞ்சப்புகழ்ச்சி போராட்டம்…!

கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சமூக பிரச்சனைக்காக போராடும் போராளிகளை ரவுடிகளாக சித்தரித்து செயல்படும் காவல்துறை கண்டித்து நூதன முறையில் பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்க வந்த விவசாய சங்க நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: அடிப்படை தேவைக்களுக்கு போராடிய விவசாயிகளை ரவுடிகள் பட்டியலில் சேர்ப்பதா? எனக்கூறி கருமத்தம்பட்டி போலீசாருக்கு பூங்கொத்து கொடுத்து விவசாயிகள் வஞ்சப்புகழ்ச்சி போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் தேவைக்காக போராடிய போராளிகளை ரவுடிகளை போல கருமத்தம்பட்டி போலீசார் சித்தரித்து அந்த பட்டியலில் விவசாயிகளை சேர்த்ததற்கு கருமத்தம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அடிதடி, கொலை, கொள்ளை, கஞ்சா, லாட்டரி, சாராயம், கட்டபஞ்சாயத்து செய்பவர்களை சேர்க்கும் ரவுடி பட்டியலில் அவிநாசி அத்திக்கடவு திட்ட, மணல் கொள்ளை, ஜல்லிக்கட்டு, சுங்கச்சாவடி, சோமனூர் பேருந்து நிலைய விபத்துக்கு, மதுக்கடை எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களை முன்னின்று நடத்திய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் எலச்சிபாளையம் பிரபாகரன், மாதப்பூர் ஜெயக்குமார், கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஊஞ்சப்பாளையம் வேலுசாமி, ஆனந்தகுமார் அவர்களை ரவுடி பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி அன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்த நிலையில் இன்று வரை ரவுடிகள் பட்டியலில் இருந்து யாருடைய பெயரும் நீக்கப்படவில்லை.



சமூக போராளிகளை ரவுடி பட்டியலில் சேர்த்த கருமத்தம்பட்டி காவல்துறையை கண்டித்து வஞ்சப்புகழ்ச்சி செய்யும் வகையில் நூதன போராட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஈடுபட்டனர்.



இதற்காக அச்சங்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் வழக்கறிஞர் பிரபாகரன், ராம் முன்னிலையில் காவல்துறையினருக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவிப்பதற்காக 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர்.



மேலும் விவசாயிகள் கொடுத்த இனிப்புகளையும் பூங்கொத்தையும் வாங்க மறுத்த போலீஸ் அதிகாரிகள், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.



காவல்துறைக்கு எதிராக போராட்டம் ஏதும் நடத்தாமல் அவர்களை வாழ்த்தி பூங்கொத்து வழங்கி இனிப்பு வழங்க வந்த விவசாய சங்க நிர்வாகிகள் செய்வதறியாது காவல்துறை திகைத்து நின்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...