கோவையில் ஹோட்டல் உரிமையாளர் மீது பணியிலிருந்து நிறுத்தப்பட்ட ஊழியர்கள் வந்து தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை போத்தனூர் அருகே தனியார் உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை போத்தனூர் அடுத்த நஞ்சுண்டபுரம் ரோடு, அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டின் (30) இவர் பிடெக் படித்து முடித்து விட்டு போத்தனூர் மெயின் ரோட்டில் கடந்த 4 ஆண்டுகளாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சிவா, சாரதி, நவீன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் மூவரும் கடந்த சில மாதங்களாக போதை பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் வேலையை சரிவர கவனிக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால், செபஸ்டின் கடையில் பணிபுரிந்து வந்த சிவா, சாரதி, நவீன் ஆகிய மூவரையும் வேலையை விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை செபாஸ்டின் கடையில் வேலை பார்த்துவரும் வெற்றி என்பவரை சிவா மற்றும் சாரதி நேரில் வந்து அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, வெற்றிக்கு மது மற்றும் போதை பொருட்களை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
அப்போது, கடையில் வியாபாரத்தை கவனிப்பதற்காக செபஸ்டின் வந்த போது, பணி செய்ய முடியாத நிலையில் வெற்றி அங்கு இருந்துள்ளார். இதையடுத்து, செபஸ்டின் வெற்றிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அவர் சிவாவும், சாரதியும் தன்னை வந்து அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்ததாக கூறி இருக்கிறார்.
இதையடுத்து, செபாஸ்டின் சிவாவை செல்போன் மூலம் அழைத்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதுள்ளது. இதையடுத்து, ஆத்திரம் தீராத சிவா, சாரதி, நவீன் மற்றும் அவர்களது நண்பர் மிதுன் உட்பட சிலருடன் சனிக்கிழமை மாலை செபஸ்டின் நடத்திவரும் ஹோட்டலுக்கு முன்பு காரில் வந்துள்ளனர்.
கடையின் முன், மது போதையில் நின்று கொண்டு கடைக்கு வந்து செல்லும் பெண்களிடம் கிண்டல் செய்துள்ளனர். இதைப் பார்த்த செபஸ்டின், சிவா மற்றும் சாரதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். உடனே, ஆத்திரமடைந்த சிவாவும் சாரதியும் தகாத வார்த்தைகள் பேசியதோடு செபாஸ்டினை, கல்லால் தலை மற்றும் முகத்தில் தாக்கினர்.
இதில், செபாஸ்டினுக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு வருவதற்குள் செபாஸ்டின் மீது தாக்குதல் நடத்திய சிவா, சாரதி, மீதுன், நவீன் உட்பட சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர், அருகில் உள்ளவர்கள் செபாஸ்டினை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து, செபாஸ்டின் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் சிவா, சாரதி ,நவீன்,மிதுன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹோட்டல் உரிமையாளர் மீது பணியிலிருந்து நிறுத்தப்பட்ட ஊழியர்கள் வந்து தாக்குதல் நடத்திய சம்பவ சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.