நெருக்கடியில் ஜவுளித்துறை.. அதிகரிக்கும் நூல் விலை.. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 2-நாள் வேலை நிறுத்தம்..!

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் 16-மற்றும் 17-ல் திருப்பூர் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த அனைத்து நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.


திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் 16-மற்றும் 17-ஆகிய இரண்டு தினங்களில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பின்னலாடை துறை சார்ந்த அமைப்புகளிடம் ஆதரவு திரட்ட இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், தலைமையில் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் மற்றும் தொழில்துறை சார்ந்த அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பின்னலாடை சார்ந்த தொழில்கள் அதிக அளவு இருக்கக் கூடிய சூழ்நிலையில் உடனடியாக இப்பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தயாராக இருப்பதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழு மூலமாகவும், இப்பிரச்சனையை முன்னெடுத்துச் செல்ல தயாராக இருப்பதாக கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்கனவே 16-ஆம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஆறு நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இதனை மாநிலம் தழுவிய போராட்டமாக கொண்டு செல்ல இருப்பதால் 16-மற்றும் 17-ஆகிய இரண்டு தினங்களில் நடத்துவது என்றும், திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு தினங்கள் முழு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களிலும் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்ட இருப்பதாகவும் தொழில் துறையினர் தெரிவித்தனர்.

மேலும், இந்த கூட்டத்தில் பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை தவிர்க்க வேண்டும், பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்தது போல நூல் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும், நாளைய தினம் கோவை வர உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தொழில்துறை நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கையை முன்வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...