"என்ன பயமா இருக்கா..! 2024-இன்னும் பயங்கரமா இருக்கும்" - கோவையில் திமுகவினர் அதிரடி போஸ்டர்..!

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டான நிலையில், கோவையில் திமுக ஆட்சியை கொண்டாடும் வகையில் பீஸ்ட் திரைப்பட வசனத்தின் பாணியில் "என்ன பயமா இருக்கா... 2024 இன்னும் பயங்கரமா இருக்கும்" என திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


கோவை: திமுக ஆட்சி அமைந்து ஓராண்டான நிலையில் பீஸ்ட் திரைப்பட வசனத்தின் பாணியில் கோவையில் ஒட்டப்பட்டுள்ளதிமுக போஸ்டர்கள்.

கோவையில் இரயில் நிலையம், அரசு மருத்துவமனை அருகில் உள்ள பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் திமுக வினர் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கோவையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரும் அதில் உள்ள திரைப்பட பாணி வசனமும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.



மேலும், கோவை மாவட்டத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனையை மக்களுக்கு கூறும் வகையில் கோவை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புகைப்பட கண்காட்சி போன்றவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...