கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை: ஏழு மாத கர்ப்பிணியான மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை துடியலூர் சந்தை வீதியைச் சேர்ந்த ரவிக்குமார், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட வளர்மதிக்கு, திருமணத்திற்குப் பிறகே ரவிக்குமார் ஏற்கனவே மற்றொரு பெண்ணை திருமணம் செய்து குழந்தையும் பெற்றிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், தனது முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதாகக் கூறி வளர்மதி கணவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, தன்னுடன் வாழ விரும்பினால் வாழலாம், இல்லையெனில் செத்து விடு என்று ரவிக்குமார் பேசியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதனால் மனமுடைந்த ஏழு மாத கர்ப்பிணியான வளர்மதி, கடந்த 2010-ஆம் ஆண்டு சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, ரவிக்குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜ், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரவிக்குமாருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அர்ச்சனா ஆஜராகி வாதாடினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...