கோவையில் தனியார் நிறுவனத்தில் மோட்டார் பம்ப் சரிந்து விழுந்து விபத்து - தொழிலாளி பலி…!

படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவையில் தனியார் நிறுவனத்தில் மோட்டார் பம்ப் சரிந்து விழுந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் மாறன். இவரது மகன் தங்கராஜ் (38). திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மேலும், தங்கராஜ் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் கடந்த 5-ஆண்டுகளாகத் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தங்கராஜ் அந்த நிறுவனத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது மோட்டார்கள் அடுக்கி வைத்திருந்த ரேக்கை, டிராலி வண்டி மூலம் சூப்பர்வைசர் மணி தூக்கி உள்ளார். அப்போது மோட்டார் வைத்து இருந்தரேக் சரிந்து தங்கராஜ் மீது விழுந்துள்ளது.

இதில், படுகாயமடைந்த தங்கராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உரிய பாதுகாப்பு வழங்காமல் அஜாக்கிரதையாக பணியாற்றிய வடமாநில தொழிலாளி சரண் பக்கட் மற்றும் சூப்பர்வைசர் மணி ஆகியோர் மீதுதுடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...