கோவையில் நடைப்பெற்ற 'நலம்' இலவச மருத்துவ முகாமில் 500-பேர் பயன்..!

ராஜ வீதியில் நடந்த நலம் இலவச மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.


கோவை: கோவை, ராஜ வீதியில் நடந்த "நலம்" இலவச மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.



முன்னதாக இந்த நிகழ்ச்சியை பா.ஜ.க முன்னாள் உக்கடம் மண்டல தலைவர் சேகர் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி சுரபி ஜுவல்லர்ஸ் கார்த்திக் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்மராட்டா பவன் தலைவர் லக்ஷ்மன் துக்காராம் பாட்டில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும், இதில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் தலைவர் R.ராஜேஷ்குமார், வோர்ல்டு மலையாளி கவுன்சில் செயலாளர் C.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை மக்கள் சேவை மையம், பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் உலக மலையாளிகள் சமாஜம் சார்பில், 'நலம்' என்ற தலைப்பில் இலவச மருத்துவ முகாம் ராஜ வீதி, தேர்முட்டி திடல் அருகே துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.



இதில், பொது மருத்துவம், மகளிர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைமருத்துவம், தோல் நல மருத்துவம், குடல் அறுவை சிகிச்சை மருத்துவம், கண் நலம் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை மருத்துவம் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கியதுடன், தேவையான நபர்களுக்கு மருந்துப் பொருட்களும் வழங்கப்பட்டது.



இதில் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கோவையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வார்டில் நடைபெறும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது வாரமாக ராஜவீதியில் உள்ள துணி வணிகர்கள் பள்ளியில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், இறுதியில் பா.ஜ.க முன்னாள் மாவட்ட செயலாளர் கண்மணி பாபு நன்றி கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...