திருப்பூரில் ரேஷன் கடைகளில் முறைகேடு..? நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஒழிப்பு பாசறை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் விநியோகிப்பது இல்லை என குற்றம் சாட்டி நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஒழிப்பு பாசறை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை சொசைட்டிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம் நியாய விலை கடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் பொருளை வழங்க மறுத்து, தற்போது இருப்பு இல்லை எனவும் மாதக் கடைசியில் வந்து வாங்கிச் செல்லுமாறு, பணியாளர்கள் பொதுமக்களை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.



இதுபோல, ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை சொசைட்டிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம் நியாய விலை கடையின் முன்பு நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஒழிப்பு பாசறை அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை சொசைட்டிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் வாங்காமலே, வாங்கியதாக குறுந்தகவல் வருகிறது. இதுகுறித்து கேட்டால் முறையாக பதிலளிக்காமல் மிரட்டும் தொணியில் அலுவலர்கள் பேசுவதாக, மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர், என்றனர்.

எனவே, கடைக்கு ஒதுக்கீடு செய்துள்ள குடும்ப அட்டை மற்றும் 'அ' பதிவேடு பொருட்கள் இருப்பு விற்பனை பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



மேலும், புகாருக்குள்ளான ரேஷன் கடை ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு ஊழியரை மாற்ற வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டநாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஒழிப்பு பாசறை அமைப்பினர் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...