இசைஞானியின் 80 ஆவது பிறந்தநாள்: கிரீன் கிளீன் அமைப்பு சார்பில் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி..!

இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்தநாளையொட்டி வருகிற ஜூன் 2 ஆம் தேதி, கோவையில் அவர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கிரீன் கிளீன் அமைப்பினர் அறிவிப்பு.



கோவை: இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்தநாளையொட்டி வருகிற ஜூன் 2 ஆம் தேதி, கோவையில் அவர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கிரீன் கிளீன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக கோவையில் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர், இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் வருகிற ஜூன் இரண்டாம் தேதி கொண்டாடப்படுவதாகவும், அதனை மிகப்பெரிய அளவில் கொண்டாடும் வகையில், கிரீன் கிளீன் என்ற அமைப்பு சார்பில், நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டனர்.

கிரீன் கிளீன், என்ற தங்களது அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சேவைகள் ஆற்றி வருவதாகவும், தற்போது சுற்றுச்சூழலை மையப்படுத்தியே இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்தனர்.

பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் அதிக அளவில் மரங்களை நட்டு அதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த இசை நிகழ்ச்சியில், இளையராஜா பங்கேற்பார் என்றும் தென்னிந்திய இசை உலகில் முன்னணி பாடகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என்று அறிவித்தனர்.

15,000 முதல் 20 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ளவர் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நிகழ்ச்சியில், சாமானிய மக்களும் பங்கேற்கும் வகையில் குறைந்த அளவிலான அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகவும், ஏழை மக்களுக்கு இலவசமாகவும் அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.



முன்னதாக, இசை நிகழ்ச்சிக்கான முத்திரை மற்றும் போஸ்டர் ஆகியவற்றையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...