வனத்துறையினரை விரட்டிய 'பாகுபலி' யானையால் பரபரப்பு!

மேட்டுப்பாளையம் சமயபுரத்தில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலியை விரட்ட முயன்ற போது யானை, வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியிலிருந்து பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்படக் கூடிய காட்டு யானை கடந்த 10 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

விளை நிலங்களுக்கு உள்ளே புகுந்து வருகிறது பயிர்களை சேதப்படுத்தி வரும் பாகுபலி யானை, சமயபுரம் நெல்லிதுறை குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பாகுபலி சமயபுரம் ஊருக்குள் நுழைந்து அங்குள்ள கிராம சாலையின் நடுவே நடந்து சென்றது.

இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானை பாகுபலியை விரட்ட முயன்றனர். அப்போது, டார்ச் லைட்டுகள் வைத்து வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்ட முயன்றபோது அது திடீரென வனத்துறையினரை நோக்கி பிளிறியபடி விரட்டிச் சென்றது.

இதனால், அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அங்கிருந்து தள்ளிச் சென்றனர். இதுவரை காட்டு யானை பாகுபலி யாரையும் தாக்கியது இல்லை என்ற கூறப்பட்டு வந்த நிலையில், யானை வனத்துறையினரை தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்கள் யாருக்கேனும் ஆபத்து ஏற்படும் முன், காட்டு யானை பாகுபலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...