ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

வரும் 20ஆம் தேதி ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சியை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: ஆண்டுதோறும் ஊட்டியில் மலர் கண்காட்சி நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 20 ஆம் தேதி ஊட்டியில் மலர் கண்காட்சி துவங்குகிறது. இந்த மலர் கண்காட்சியை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து வரும் 19 ஆம் தேதி கோவை வருகை வரவுள்ளார். அன்னூர் அருகே பெரியபுத்தூரில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் புதிய போர் வெல்களை, முதல்வர் இயக்கி துவக்கி வைக்க உள்ளார்.

மேலும், பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் விவசாயிகளுடன், முதல்வர் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையினரும் செய்து வருகின்றனர்.

இதையடுத்து, தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் போர்வெல்கள் அமைய உள்ள மதுவாணன் குட்டையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். முதல்வர், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ள பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தையும் ஆய்வு செய்தார்.

ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...