கோவை தடாகம் அருகே மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

இன்று மதியம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பலத்த இடி மின்னலுடன் மழை பொழிந்ததால், அவர் மரத்தின் அடியில் ஓதுங்கியுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.



கோவை: கோவை தடாகம் சாலை சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (56). இவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று மதியம் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது பலத்த இடி மின்னலுடன் மழை பொழிந்ததால், அவர் மரத்தின் அடியில் ஓதுங்கியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், ரங்கராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தடாகம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம், ரங்கராஜ் அருகே நின்று கொண்டிருந்த வீரன் என்பவரையும் மின்னல் தாக்கியதில், அவருக்கு கையில் சிறிது காயங்கள் மட்டுமே ஏற்பட்ட நிலையில் அவர் உயிர் தப்பினார்.

கோவையில் பட்டப்பகலில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...