வால்பாறை அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு பற்றி விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது என்று தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்க விழிப்புணர்வு செய்தனர்.


கோவை: வால்பாறையில் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே வனப்பகுதியில் காட்டு தீப்பிடித்து எரிந்து வருகிறது.

இதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளில் தீ பிடித்தால் எவ்வாறு தீயை அணைப்பது என்று தெரியாமல் இருப்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வால்பாறை தீயணைப்புத்துறையினர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று எஸ்டேட் பகுதி தொழிற்சாலை அரசு அலுவலகங்கள் பள்ளிகள் போன்றவற்றை தீ பிடித்தால் எவ்வாறு அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



இதில், ஒரு கட்டமாக வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு பற்றி விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது என்று செயல்முறை விளக்க விழிப்புணர்வு செய்தனர்.

இதில், மருத்துவமனை ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தீயணைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...