கோவையில் சரக்கு ஆட்டோ மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி…!

துடியலூர் - கோவில்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்த போது, எல்.ஜி.பி காலனி அருகே எதிரே வந்த, சரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (23). கூலி தொழிலாளி. இவரது மனைவி சௌந்தர்யா (21).இன்று காலை, அவர் தனது இருசக்கர வாகனத்தில் துடியலூர் - கோவில்பாளையம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எல்.ஜி.பி காலனி அருகே வந்த போது, எதிரே வந்தசரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கோகுலகிருஷ்ணன் வந்த இருசக்கர வாகனத்தின் மீதுமோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார்.

இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து, அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த சக்திவேல் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...