துடியலூர் - கோவில்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்த போது, எல்.ஜி.பி காலனி அருகே எதிரே வந்த, சரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (23). கூலி தொழிலாளி. இவரது மனைவி சௌந்தர்யா (21).இன்று காலை, அவர் தனது இருசக்கர வாகனத்தில் துடியலூர் - கோவில்பாளையம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எல்.ஜி.பி காலனி அருகே வந்த போது, எதிரே வந்தசரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கோகுலகிருஷ்ணன் வந்த இருசக்கர வாகனத்தின் மீதுமோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த சக்திவேல் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.