மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கூலி வேண்டும்: கோவையில் சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கூலியை வழங்க வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கூலியை வழங்க வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசிற்கு அதிக வருவாய் ஈட்டித் தருகிற துறையாக டாஸ்மாக் நிர்வாகம் உள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மதுபான பெட்டிகளை, ஏற்றுவதற்கு கூலியை உயர்த்தி தர வேண்டும் என்று பல மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தற்போது, ஒரு மதுவகை பெட்டியை ஏற்றுவதற்கு கூலியாக ரூ.1.45 பைசா தரப்படுகிறது. ஒரு பெட்டிக்கு ஏற்று கூலி ரூ. 3.50 வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமை பணி தொழிலாளர்களுக்கு, ஒவ்வொரு வகையான கூலி வழங்கப்படுகிறது, என்று குற்றம்சாட்டினர்.

எனவே,தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான அதிகபட்ச கூலி நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவை, பீளமேடு டாஸ்மாக் குடோன் முன்பு சிஐடியு டாஸ்மாக் சுமை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏராளமான சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஏற்றுக் கூலி வழங்க வேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜகாங்கிர் தலைமை தாங்கினார்.

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர், ராஜன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...