கோவை தடாகம் அருகே இறந்த நிலையில் பெண் யானை - ஆந்த்ராக்ஸ் நோய் இல்லை என உறுதி…!

கோவை தடாகம் வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டதுள்ளது.



கோவை: கோவை தடாகம் வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டதுள்ளது.

கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு தடாகம் காப்புக்காடு அருகே வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்த நிலையில் கிடப்பது கண்டறியப்பட்டது.

மேலும், யானை இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆனதால், யானையின் உடலில் திரவம் வழிவது போன்ற சுவடு இருந்துள்ளது. 



எனவே, இறந்த யானைக்கு ஆந்திராக்ஸ் பாதிப்பு இருக்கலாம், என வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்தனர்.



இதனால், மாஸ்க் போன்ற உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் இறந்த யானையின் அருகே சென்று திரவ மாதிரிகளை ஆந்த்ராக்ஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 



பரிசோதனையின் முடிவில், யானைக்கு ஆந்திராக்ஸ் இல்லை என்பது உறுதியானது.

இதையடுத்து, மாலை நேரம் ஆனதால், நாளை காலை கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையில் இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு நடைபெறும், என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இறந்தது பெண் யானை என்பதால், யானை கர்ப்பமாக உள்ளதா? என்பது உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், சிறுமுகை வனச்சரகம், பவானி அணை நீர் தேக்கம் அருகே ஒரு பெண் யானை கருச்சிதைவு ஏற்பட்டு குட்டியுடன் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட நிலையில், மீண்டும் கோவை வனக்கோட்டத்தில் ஒரு பெண் யானை இறந்துள்ளது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...