கோவை சூலூரில் வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50-கிலோ கஞ்சா பறிமுதல் - மதுரையை சேர்ந்த பெண் கைது..!

காங்கேயம்பாளையம் அருகே வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: ஆப்ரேஷன் 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை தடுப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை சூலூர் காங்கேயம்பாளையம் அருகே வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், சூலூர் ஆய்வாளர் மாதையன் தலைமையில், உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திர பிரசாத் உள்ளிட்ட போலீசார் சூலூர் காங்கேயம்பாளையம் அன்னலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஜெயபாண்டியம்மாள் (30) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பன்டில்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த மலைச்சாமி என்பவரது மனைவி ஜெயபாண்டியம்மாள், தற்போது திருப்பூர் மாவட்டம் கொம்பன்காட்ட புதூர் பகுதியில் வசித்து வருவதாகவும், அவர் கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, மதுரையை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (41) என்பவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.



இதையடுத்து, ஜெயபாண்டியம்மாளை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்தால் 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...