போலந்து நாட்டில் 'வேலை வாங்கி தருகிறேன்' எனக்கூறி ரூ.3.5-லட்சம் மோசடி: கோவை இளைஞர் போலீசில் புகார்..!

போலந்து நாட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3.5-லட்சம் மோசடி செய்த புளியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் மீது இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.


கோவை: போலந்து நாட்டில் வேலை எனக்கூறி ரூ.3.5-லட்சம் மோசடி செய்ததாக இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் டாக்டர் முனுசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் விஷ்ணுராம் (27). பட்டதாரி இளைஞர். இந்நிலையில், இவர் கோவை புளியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஐசிசி இமிகரேஷன் கன்சல்டன்ட் என்ற தனியார் நிறுவனத்தை அணுகி தனக்கு வேலை வாய்ப்பு வந்தால் தெரிவிக்கும்படி தெரிவித்துள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் போலந்து நாட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ.3.5 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து விஷ்ணுராமை அந்த நிறுவனத்தினர் போலந்து நாட்டிற்கு அனுப்பி உள்ளனர்.

ஆனால் இவர்கள் கூறிய அந்த ஐடி நிறுவனம் அங்கு இல்லாததால், மீண்டும் அவர் இந்தியா திரும்பி வந்துள்ளார். பின்னர் தான் கொடுத்த ரூ.3.5-லட்சத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விஷ்ணுராம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...