பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு: கோவை சேரன்மாநகர் சுற்றுப்புற பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு..!

பில்லூர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து ஊழியர்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விளாங்குறிச்சி, சேரன்மாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.


கோவை: சிங்காநல்லூர், காமராஜர் சாலையில் பில்லூர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஊழியர்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் காரணமாக விளாங்குறிச்சி, சேரன்மாநகர், விசுவாசபுரம், பூங்கா நகர் பாலாஜி நகர், LN நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

• குடிநீர் விநியோக சுழற்சி பாதிப்பு!

22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு கூறியதாவது:-



பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பணிகள் நிறைவடைந்தாலும் பில்லூரிலிருந்து முதலில் பெரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். அதன்பின் அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற வேண்டும்.

அதற்கு பின்பு தான் குடியிருப்பு பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய முடியும். ஒவ்வொருமுறையும் குடிநீர் குழாய் உடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் போது தண்ணீர் விநியோகம் செய்யும் சுழற்சி முற்றிலும் பாதிக்கப்படும். எனவே குடியிருப்பு பகுதிகளுக்கு வழக்கமாக குடிநீர் வினியோகம் செய்யும் நாட்களுக்கு இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கும்.

குடிநீர் வினியோகம் துவங்கினால் அடுத்த சுழற்சி முதல் குடிநீர் வினியோகம் செய்யும் இடைவெளி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். கோடை காலத்தில் இதுபோன்று எதிர்பாராத சம்பவங்களால் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பு மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இருப்பினும் இப்பிரச்சினை சீராகும் வரை மக்கள் தண்ணீரை சிக்கனமாகவும், தற்காலிகமாக மாற்று ஏற்பாடும் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...