'மழை வரப்போகுது...' - குடை எடுத்துட்டு போங்க மக்களே..! தமிழகத்தில் 2-நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு..!

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் 100-டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...