திருப்பூரில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு.. 3-மாதம் அவகாசம் வேண்டும்: மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை..!

பொதுத்தேர்வு முடியும் வரை அகற்றும் பணி நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் கட்டாயம் 3-மாதம் அவகாசம் வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: பொதுத்தேர்வு முடியும் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது, 3 மாதம் அவகாசம் வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலங்காடு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்தும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இதனிடையே, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீரபாண்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்களது குடியிருப்புக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று துவங்குவதற்காக வந்தனர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த 3-மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ராயபுரம் கருவம்பாளையம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு திருப்பூர் காவல்துறை துணை ஆணையர் ரவி மற்றும் மூன்றாவது மண்டல துணை ஆணையர் வாசுவிக்ரம் மற்றும் நான்காவது மண்டல துணை ஆணையர் செல்வநாயகம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



நாளை முதல் பொதுத்தேர்வு துவங்குவதால் பொதுத்தேர்வு முடியும் வரை அகற்றும் பணி நடைபெறாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் கட்டாயம் 3-மாதம் அவகாசம் வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...