37-வருட நீலகிரி மலை ரயிலின் இசைக்குயிலுக்கு ஓய்வு..!

நீலகிரி மலை ரயில் பயணியரை மகிழ்வித்து 'பாடும் நிலாவாக' இருந்த 'நைட்டிங்கேல்' விருது பெற்ற டி.டி.ஆர்., வள்ளி பணி ஓய்வு பெற்றுள்ளார்.



நீலகிரி: குன்னுாரில் இருந்து நீலகிரி மலை ரயில் பயணத்தில் பயணியர் மகிழ்ச்சியாக பாடல்கள் பாடி பயணியரை கவர்ந்த - நைட்டிங்கேல் என்ற விருதைப் பெற்றுள்ளார் பணி ஓய்வு பெற்ற வள்ளி (டி.டி.ஆர்) யார் இவர்?



நீலகிரி மலை ரயிலில் சுற்றுலா பயணியரை பாடல்களால் மகிழ்ச்சி அடைய செய்தவர் டிக்கெட் பரிசோதகர் வள்ளி. இவர் 1962-யில் கேரளா பாலக்காடு பகுதியில் உள்ள சரனூரில் பிறந்தார்.

தனது பள்ளி படிப்பினை குடும்ப சூழ்நிலை காரணமாக பாதியில் கைவிட்ட இவர். தனது தந்தை 1983-யில் இறந்த பின்னர் அவரது தூய்மை பணியாளர் வேலையை சரனூரில் உள்ள அரசு அலுவலகத்தில் செய்து வந்தார்.

அதனை தொடர்ந்து பணியிடை மாற்றம் செய்யப்பட்ட இவர் குன்னூரில் 1991-இல் இருந்து 2011- வரை பணியாற்றி வந்தார். அதனை தொடர்ந்து 2012 டி.டி.ஆர் காண தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இவர் ஜனவரி 2016-இல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் ரயிலில் டி.டி.ஆராக சேர்ந்தார்.



தமிழ், மலையாளம், ஹிந்தி, படுகா உள்ளிட திரைப்படப் பாடல்களைப் பாடி சுற்றுலா பயணியரை கவர்ந்தார். பாடல் என்பது எனது பணி அல்ல, ஆனால் பெரிதும் ஊட்டிக்கு செல்பவர்கள் தங்களது மன நிம்மதியையும், சந்தோசத்தையும் தேடி செல்கின்றனர்.



அதனால் அவர்களை மகிழ்விப்பதற்காகவும், ரயிலில் சுற்றுலா பயணியர் சோர்வடையாமல் இருக்க, தினமும் சினிமா பாடல்களை பாடி மகிழ்விப்பேன். இதனால், சேலம் கோட்ட பொது மேலாளரிடம் விருது பெற்றேன்.

ரயில்வே அமைச்சகம் எனக்கு, 'நைட்டிங்கேல்' விருது வழங்கியது. எனது 37-ஆண்டு பணியில் நீலகிரி மலை ரயிலில் பணிபுரிந்த காலம், வாழ்வின் பொற்காலமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...