கோவை சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை - 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தது - விவசாயிகள் வேதனை….!

லிங்காபுரம், மொக்கைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழைகள் முறிந்து நாசமாகியுள்ளதால் விவசாயிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து நாசமாகின. இதனால், விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம், மொக்கைமேடு, காந்தவயல், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழை பயிர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது வருவதால்,லிங்காபுரம், மொக்கைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழைகள் முறிந்து நாசமாகியுள்ளன. 

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது :காட்டு யானைகளின் தொந்தரவால் ஏற்கனவே விவசாயம் அழிந்து வருகிறது. மற்றொரு புறம் பயிர்களுக்கான இடுபொருட்கள், உரம் உள்ளிட்டவற்றின் விலையேற்றமும் பிரச்சனையாக உள்ளது. இந்த நிலையில், மழை,காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினாலும் விவசாயம் நாசமாகி வருகிறது. இதனால், விவசாயத்தை நம்பி வாங்கியுள்ள கடனையும் கட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...