தமிழகத்திலேயே முதல் முறையாக கோவை பத்திர எழுத்தாளர்களுக்கான பிரத்தியேக இணைய தளம் துவக்கம்…!

கோவை மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர - நகல் எழுதுவோர் சங்கத்தின், புதிய இணையதளம் (www.tndwreginet.net) துவக்க விழா திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவு அருகே நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்ட பத்திர - நகல் எழுத்தாளர் சங்கத்தின் புதிய இணையதளம் துவக்க விழா கோவை பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர - நகல் எழுதுவோர் சங்கத்தின், புதிய இணையதள துவக்க விழா திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.



இந்த இணையதள சேவையை, அச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.

தமிழகத்திலியே பத்திர எழுத்தாளர்களுக்கான இணையதள சேவை, கோவை மாவட்டத்தில் தான் துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணையதளம் மூலம் www.tndwreginet.net, அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தாளர்களை கண்டறிவதோடு, மின் கட்டணம், ரயில்வே முன்பதிவு, டிடிசிபி அங்கீகாரம், மற்றும் வேலை வாய்ப்புகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த இணையதளம் மூலம் பொதுபோக்கு நிகழ்ச்சிக்காக முன்பதிவுகளை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதே போல, கோவையை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவையை துவங்கி இறுதியாக ஒரே இணைய தளமாக மாற்றும் இலக்கு உள்ளதாக, சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...