இக்கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல கோரிக்கை மாநாடு இன்று நடைபெற்றது.
சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பரமனியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்கு உறுதி அளித்தபடி தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும், பத்தாண்டுகள் பணியாற்றிவரும் அரசு ஊழியர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், ஒய்வுதியம் இல்லாத தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள்,மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஓய்வுதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மேலும், அங்கன்வாடி ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட கால முறை பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் வழங்க வேண்டும், என 20 கோரிக்கை அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அங்கன்வாடி மைய பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், நியாயவிலைகடை மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர், இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.