கெயில் குழாய் பதிப்பை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்- கோவையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து திட்டவட்டம்..!

இந்த கெயில் குழாய் என்பது கோவை-கிருஷ்ணகிரி வரை 310-கிலோ மீட்டர் தூரம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.



கோவை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.



இதில் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கோவையில் பல கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

சாலை விரிவாக்கம், புறவழி சாலை, மேம்பால விரிவாக்கம், நொய்யல் சீரமைப்பு, கெயில் குழாய் பதிப்பு, உயர்மின் கோபுரங்கள் அமைத்தல், அன்னூர் பைபாஸ், அத்திக்கடவு அவிநாசி திட்டம், வனவிலங்குகளால் விவசாயத்திற்கு விவசாயிகளுக்கும் ஏற்படும் ஆபத்துகள் ஆகிய திட்டங்களில் சில நிறைவேற்றப்பட்டும் நிறைவேற்றப்படாமலும் இருப்பதாக தெரிவித்தார்.

இதையெல்லாம், நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். இத்திட்டங்களை எல்லாம் நிறைவேற்றும் போது விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் உயர்மின் கோபுரங்கள், கெயில் குழாய் அமைப்பதாக இருந்தால் விளை நிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டுமென்பது தான் தங்கள் கோரிக்கை எனவும் கூறினார்.



ஜெயலலிதா காலத்தில் கெயில் குழாய் விளை நிலங்களில் பதிக்கவே கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளதாக குறிப்பிட்ட அவர் ஆனால் கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

அதில் விவசாயிகள் சம்மதித்தால் மட்டுமே குழாய்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். எனவே அரசு விவசாய நிலங்களை விட்டுவிட்டு ரயில் பாதைகளுக்கு அருகே, புறம்போக்கு நிலங்களில் குழாய்களைப் பதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் பணியாற்றிய ஆட்சித்தலைவர் எல்லாம் விவசாய சங்க தலைவர்களின் கருத்துக்களை கேட்டுத்தான் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளதாகவும், தற்போது உள்ள மாவட்ட ஆட்சியரும் அதே போலவே தான் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சிலர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுவதாக கூறி வருகின்றனர்.

அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் கெயில் நிறுவனத்திற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆதரவாளராக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கெயில் குழாய் என்பது கோவை-கிருஷ்ணகிரி வரை 310 கிலோ மீட்டர் தூரம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதற்கு முதல்வர் கூறியதை போல நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிச்சாமி, தென்னை மற்றும் தென்னை சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டுமென தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...