கோவை ரோஸ் கார்டன் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ் கார்டன் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பில், முகமது உசேன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், குழந்தைகள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.


கோவை: இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை எனப்படும் ஈகைத் திருநாள் பெருநாளாக கொண்டாடப்படுவது வழக்கம். ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடித்து, 30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, நேற்று மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் அறிவித்தார்..

இதனைத் தொடர்ந்து, 30 வது நாளான இன்று ரமலான் மாத புனித நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் நோன்பு முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையைக் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.



கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையானது ரத்து செய்யப்பட்டு, எளிய முறையில் வீடுகளில் தொழுகை நடத்தபட்டது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்ததால், கோவையில் ரம்ஜான் பண்டிகை பள்ளிவாசல்களில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பண்டிகையையொட்டி கோவையில் உள்ள அனைத்து மசூதிகளில் இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தொடர்ந்து, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ் கார்டன் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பில், முகமது உசேன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், ஜிபி நாசர், இமாம்.சையத் அலி பாகவி, ரயில்வே ஜமீல், ஏஜாஸ் உள்ளிட்ட குழந்தைகள் பெரியவர்கள் என அப்பகுதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.



புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், தொழுகைக்குப் பின்னர், ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இன்றைய, தினத்தில்தங்கள் இல்லங்களில் சமைக்கப்படும் உணவு வகைகளை சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பகிர்ந்து ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சி பொங்க இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...