பணியில் மெத்தனப் போக்கு காட்டிய ஊழியரால் மாநகராட்சிக்கு நிதியிழப்பு: 15 நாட்களுக்குள் சுகாதார மேற்பார்வையாளர் பதில் அளிக்க உத்தரவு!

எல்லை தாண்டி சென்று குப்பைகளை ஏற்றிச் சென்று குப்பைக் கிடங்கில் கொட்டுவதை கண்காணிக்கும் பணியில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட ஊழியரால் மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் பதிலளிக்க சுகாதார மேற்பார்வையாளருக்கு, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டூ எண்‌.90 மற்றும்‌ 91-ல்‌ பணிபரியும்‌ சுகாதார மேற்பார்வையாளர்‌ மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை வாகன எண்‌. TN 66 L 9498 என்ற வாகனத்தினை ஒப்பந்த ஓட்டூநா்‌ மாநகராட்சி எல்லை தாண்டி சென்று குப்பைகளை ஏற்றி அதனை வெள்ளலார்‌ குப்பைக்‌ கிடங்கில்‌ கொட்டுவதை கண்காணிக்காமல்‌ பணியில்‌ மெத்தனப்‌ போக்குடன்‌ செயல்பட்டதாலும்‌, இச்செயலானது தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இச்செயலால்‌ மேற்படி வாகனத்திற்கு நிரப்பப்பட்ட வாகன பயன்பாடு மற்றும்‌ எரிபொருள்‌ செலவினம்‌ ஏற்பட காரணமாக இருந்து இம்மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட காரணமாக இருந்ததாலும்‌, மேற்படி நபருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு, 15 நாட்களுக்குள்‌ உரிய விளக்கத்தினை அளிக்க சுகாதார மேற்பார்வையாளருக்கு மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., உத்தரவிட்டுள்ளார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...