எல்லை தாண்டி சென்று குப்பைகளை ஏற்றிச் சென்று குப்பைக் கிடங்கில் கொட்டுவதை கண்காணிக்கும் பணியில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட ஊழியரால் மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் பதிலளிக்க சுகாதார மேற்பார்வையாளருக்கு, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டூ எண்.90 மற்றும் 91-ல் பணிபரியும் சுகாதார மேற்பார்வையாளர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை வாகன எண். TN 66 L 9498 என்ற வாகனத்தினை ஒப்பந்த ஓட்டூநா் மாநகராட்சி எல்லை தாண்டி சென்று குப்பைகளை ஏற்றி அதனை வெள்ளலார் குப்பைக் கிடங்கில் கொட்டுவதை கண்காணிக்காமல் பணியில் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாலும், இச்செயலானது தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இச்செயலால் மேற்படி வாகனத்திற்கு நிரப்பப்பட்ட வாகன பயன்பாடு மற்றும் எரிபொருள் செலவினம் ஏற்பட காரணமாக இருந்து இம்மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட காரணமாக இருந்ததாலும், மேற்படி நபருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு, 15 நாட்களுக்குள் உரிய விளக்கத்தினை அளிக்க சுகாதார மேற்பார்வையாளருக்கு மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., உத்தரவிட்டுள்ளார்.