தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தினக்கூலியாக 475-வழங்கி வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் 325-மட்டுமே வழங்குவதாக சமூக நீதி கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், அடிப்படை வசதிகள் இல்லை என சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்ப்பட்ட தூய்மைபணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் 10-ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தினக்கூலியாக 475-வழங்கி வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஒப்பந்தம் எடுத்துள்ள Crystal நிறுவனம் பணியாளர்களுக்கு 325-மட்டுமே வழங்குவதாகவும், அதிலும் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்துவிடுவதாகவும், அரசு விடுமுறை தினத்தன்றும் பிடித்தம் செய்யப்டுவதாகவும், மாவட்ட ஆட்சியர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு 10-ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்த பணி வழங்கவும், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.