கோவை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ணியாற்றும் தூய்மை பணியாள‌ர்க‌ளுக்கு குறைந்த‌ ப‌ட்ச‌ ஊதிய‌ம் வழங்கப்படுவதாக ம‌னு..!

தூய்மை பணியாளர்களுக்கு மாவ‌ட்ட‌ ஆட்சித்த‌லைவ‌ர் தின‌க்கூலியாக‌ 475-வ‌ழ‌ங்கி வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் 325-ம‌ட்டுமே வ‌ழ‌ங்குவதாக சமூக நீதி கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ணியாற்றும் தூய்மை பணியாள‌ர்க‌ளுக்கு குறைந்த‌ ப‌ட்ச‌ ஊதிய‌ம், அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் இல்லை என சமூக நீதி கட்சியினர் மாவட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளித்தனர்.



கோவை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் 300-க்கும் மேற்ப்ப‌ட்ட‌ தூய்மைப‌ணியாளர்க‌ள் ப‌ணியாற்றி வ‌ரும் நிலையில் 10-ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ ஒப்ப‌ந்த‌ ப‌ணியாள‌ர்க‌ளாக‌ ப‌ணிபுரிந்து வரும் பணியாளர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், தூய்மை பணியாளர்களுக்கு மாவ‌ட்ட‌ ஆட்சித்த‌லைவ‌ர் தின‌க்கூலியாக‌ 475-வ‌ழ‌ங்கி வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஒப்பந்தம் எடுத்துள்ள Crystal நிறுவனம் பணியாளர்களுக்கு 325-ம‌ட்டுமே வ‌ழ‌ங்குவதாகவும், அதிலும் ஒருநாள் ச‌ம்ப‌ள‌த்தை பிடித்த‌ம் செய்துவிடுவ‌தாக‌வும், அர‌சு விடுமுறை தின‌த்த‌ன்றும் பிடித்த‌ம் செய்ய‌ப்டுவ‌தாக‌வும், மாவட்ட ஆட்சியர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இப்பிர‌ச்ச‌னையில் மாவட்ட ஆட்சியர் த‌லையிட்டு 10-ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ பணியாற்றும் ஊழிய‌ர்க‌ளுக்கு நிர‌ந்த‌ ப‌ணி வ‌ழ‌ங்க‌வும், அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள், பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ளை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...