தமிழகத்தில், மே தினம், ரம்ஜான் பண்டிகை என, மூன்று நாட்கள் விடுமுறையால், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வால்பாறை வந்தனர்.
கோவை: மே தின விடுமுறையையொட்டி, வால்பாறையில் சுற்றுலா பயணியர் அதிக அளவில் திரண்டனர்.
தமிழகத்தில், மே தினம், ரம்ஜான் பண்டிகை என, மூன்று நாட்கள் விடுமுறையால், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வால்பாறை வந்தனர்.
வால்பாறையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்வதால், தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது.
ஓடை, ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சமவெளிப்பகுதியில், கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வால்பாறை சீதோஷ்ண நிலை கவர்ந்ததால், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா பயணியர் கூட்டம் அலைமோதியது. வால்பாறையில் இருந்து, 3-கி.மீ., தொலைவில் உள்ளது சிறுகுன்றா கூழாங்கல் ஆறு.
ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்தனர். குடும்பத்துடன் குளிக்க செல்லும் சுற்றுலா பயணியர் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகினர்.இந்தப் பகுதியில் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதி ஏற்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேபோன்று, வால்பாறையில், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசல் நிலவியது.