கோவை நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை - விசாரணை தேதிகள் அறிவிப்பு…!

சிறப்பு நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள் வழக்கம்போல் செயல்படும். மாவட்ட முதன்மை நீதிமன்றம் செயல்படாததால், ஜாமீன் முன்ஜாமீன் மற்றும் அவசரகால வழக்குகள் வாரத்தில் ஒருநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கோவை:கோடை காலத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் பல்வேறு நீதிமன்றங்கள் மே 31-ஆம் தேதி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறாது. அதே நேரத்தில், சி.ஜே.எம். நீதிமன்றம், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள் வழக்கம்போல் செயல்படும். மாவட்ட முதன்மை நீதிமன்றம் செயல்படாததால், ஜாமீன் முன்ஜாமீன் மற்றும் அவசரகால வழக்குகள் வாரத்தில் ஒருநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக, விடுமுறைகால நீதிமன்றம் செயல்படும். 

கோடைகால நீதிமன்ற வழக்கை விசாரிக்க போக்சோ நீதிமன்ற நீதிபதி குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, குற்ற வழக்குகளில் விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2, 9, 16, 23 மற்றும் 27ம் தேதிகளில் மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு, தாக்கல்செய்யப்படும் மனுக்கள் மீது 5, 12, 19, 26 மற்றும் 31 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும். 

மேலும், சிவில் வழக்குகளை விசாரிக்க முதன்மை சார்பு நீதிபதி சஞ்சீவ் பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் வழக்குகளை மே 4, 11, 12, 25 ஆகிய நாட்களில் மனு தாக்கல் செய்யலாம். விசாரணை மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...