கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது.
கோவை: மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போலி மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆனைமலை, காளியாபுரம் கந்தசாமி கவுண்டர் வீதியை சேர்ந்த சரோஜினி என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சரோஜினியை போலீசார் கைது செய்து, அவரது வீட்டில் இருந்த 1246 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.