ஆழியார் அணை நீரில் மூழ்கி - 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

ஆழியார் அணையில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், அணையின் ஓரங்களில் தண்ணீருக்குள் சேற்று பகுதிகள் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்க வேண்டாம் என்று காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (19), தனியார் கல்லூரியில் கலை அறிவியல் படித்து வந்தார். தென்காசி மாவட்டம் கடகம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமர்(22). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இருவரும், அவர்களது நண்பர்கள் ஐந்து பேருடன் இன்று ஆழியார் அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், ஆழியாறு அணையின் பின்புறம் சென்று தண்ணீரில் இறங்கி குளித்தபோது, ஸ்ரீராமர் தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட நவீன் குமார் தண்ணீரில் இறங்கி அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், இருவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், அருகிலிருந்தவர்கள் பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர்.



மேலும், சம்பவம் தொடர்பாக ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, மற்றொரு சம்பவத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆழியார் அணையில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆழியார் அணையில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், அணையின் ஓரங்களில் தண்ணீருக்குள் சேற்று பகுதிகள் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்க வேண்டாம் என்று காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...