கோவையில் வளர்ப்பு மகளுக்கு பாலியல் சீண்டல் - முன்னாள் விமானப்படை அதிகாரி போக்சோவில் கைது…..!

அந்த பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவரிடம் குழந்தையை விற்பனை செய்த கும்பல் குறித்தும், குழந்தையின் உண்மையான தாய், தந்தை யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த 54 வயது முன்னாள் விமான படை வீரர், இந்திய விமானப்படையில் உத்தம்பூர் பகுதியில் ஏர்மேனாக பணிபுரிந்து ஒய்வு பெற்ற அதிகாரி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரது, மனைவி அரசு பள்ளி தலைமையாசிரியராக உள்ளார்.

இதனிடையே, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர், அதே பகுதியில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு வசூல் செய்து வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் விமானப்படை அதிகாரி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது, 10 வயதான அந்த குழந்தை தனக்கு தனது தந்தை பாலியல் சீண்டல் செய்வதாக பள்ளி ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார்.

குழந்தை அளித்த புகாரின் பேரில், பள்ளி சார்பாக கோவை சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளனர். அதன்பேரில், சைல்டு லைன் அமைப்பினர் அந்த பெண் குழந்தையிடம் விசாரணை நடத்தினர். இதில், குழந்தை கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரிவந்ததைத் தொடர்ந்து முன்னாள் விமானப்படை அதிகாரியை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் குழந்தையை விற்பனை செய்த கும்பல் குறித்தும், குழந்தையின் உண்மையான தாய், தந்தை யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...