தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்தவித சங்கடங்களும் வர கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார். அங்கு எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கோவை: புலியகுளம் பகுதியில் "நலம்" இலவச மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
தெற்கு தொகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் இலவச மருத்துவ முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோன். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்தவித சங்கடங்களும் வர கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார்.
அங்கு எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம். நாங்கள் பேசுவது நேரலையில் முழுமையாக வருவதில்லை. அதனைக் கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். சபைகுறிப்பில் நீக்கம் தொடர்பான கருத்துக்களை விட்டுவிட்டு அனைத்தையும் ஒளிபரப்ப வேண்டும்.
இலங்கைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்றும், அன்று நடந்த உயிரிழப்பு சம்பவங்களையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பெண் தொழில் முனைவோர்களையும் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.